Sunday, 20 October 2024

தமிழ் எழுத்து புதிர்கள்

 

ஓர் எழுத்து புதிர்கள்

1. சிரித்துக் கொண்டே இருக்கும் எழுத்து?

2. கேட்டுக் கொண்டே இருக்கும் எழுத்து?

3.துரத்திக் கொண்டே இருக்கும் எழுத்து?

4. தொட்டால் சுடும் எழுத்து?

5. எப்போதும் வலியால் துடிக்கும் எழுத்து?

6. தேனீக்களுக்கு விருந்து கொடுக்கும் எழுத்து?

7. அழைத்துக் கொண்டே இருக்கும் எழுத்து?

8. வெறுப்பைக் காட்டும் எழுத்து?

9. எழுதிக் கொண்டே இருக்கும் எழுத்து?

10. ஆங்கில மாதமொன்றை குறிக்கும் எழுத்து?

11. தமிழ் மாதமொன்றை குறிக்கும் எழுத்து?


விடைகள்

1. ஈ

2. தா

3. போ

4. தீ

5. ஆ

6. பூ

7. வா

8. சீ

9. மை

10. மே

11. தை

No comments:

Post a Comment

 Learning a new language is more precious than other valuable things. Each and every one can fly with colors by learning new things through ...