Sunday, 20 October 2024

எழுத்துக்களின் வகை

 தமிழ் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்.

1. முதல் எழுத்துக்கள்

2. சார்பு எழுத்துக்கள்

"அம்மா" இச் சொல்லை அவதானியுங்கள்.  இதில் உள்ள மூன்று எழுத்துக்களும் பின்வருமாறு அமைந்துள்ளன.

அ - உயிர் எழுத்து

ம்- மெய் எழுத்து

மா- உயிர் மெய் எழுத்து 


1. முதல் எழுத்துக்கள்- 30 

உயிர் எழுத்து  -  12

 மெய் எழுத்து-    18

உயிர் எழுத்துக்கள் -  12

"" தொடங்கி "" வரையுள்ள பன்னிரண்டு  எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் ஆகும்.

*அ ஆ இ ஈ உ ஊ ஊ ஏ ஐ ஒ ஓ ஔ*

இவ் எழுத்துக்கள் உயிர் போல ஏனைய எழுத்துக்களை இயக்குவதால் "உயிர் எழுத்துக்கள்" எனப்படுகின்றன.


மெய் எழுத்துக்கள்- 18

"க்" தொடக்கம் "ன்" வரையுள்ள பதினெட்டு எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் ஆகும்.

* க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் *

இவ்விஷயத்தில் உயிருக்கு உடல் போல இருப்பதால் "மெய் எழுத்துக்கள்" எனப்படுகின்றன.


No comments:

Post a Comment

 Learning a new language is more precious than other valuable things. Each and every one can fly with colors by learning new things through ...