மெய் எழுத்துக்களின் வகை
மெய் எழுத்துக்களை அவை ஒலிக்கும் முறையைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்
1. வல்லின எழுத்துக்கள் - 6
வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லின எழுத்துக்கள் எனப்படும்.
க் ச் ட் த் ப் ற்
2. மெல்லின எழுத்துக்கள் - 6
மென்மையான ஓசையுடையுடன் ஒலிக்கும் எழுத்துக்கள் மெல்லின எழுத்துக்கள் எனப்படும்.
ங் ஞ் ண் ந் ம் ன்
3. இடையின எழுத்துக்கள் - 6
வல்லினத்திற்கும், மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையின எழுத்துக்கள் எனப்படும்.
ய் ர் ல் வ் ழ் ள்